Sri Lankan Pension
Click the link below to access PENSION PAYMEMTS:
01/2018 சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (பதிவிறக்க இங்கே சொடுக்கவும், சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு பின்வரும் ஓய்வூதியர்களுக்கு வெளிநாட்டு ஓய்வூதிய வகைப்படுத்தலின் கீழ் கொடுப்பனவு செய்கிறது;
- வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓய்வூதியர்கள்
- இலங்கையுடன் இரட்டைக் குடியுரிமையை வைத்திருத்தல்
- இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஓய்வூதியர்கள்
சுற்றறிக்கை எண். 01/2018 பதிவிறக்கவும்
வெளிநாட்டு ஓய்வூதிய கொடுப்பனவுகள் இலங்கை வங்கி – மெட்ரோபொலிட்டன் கிளை, ஹட்டன் நஷனல் வங்கி – பஞ்சிகாவத்தை கிளை, பான் ஏசியா வங்கி – பொரளை கிளை, மக்கள் வங்கி – குயின்ஸ் கிளை மற்றும் தேசிய சேமிப்பு வங்கி – மாளிகாவத்தை கிளை ஆகியவற்றினால் பராமரிக்கப்படும் விசேட வங்கிக் கணக்கின் ஊடாக மட்டுமே செலுத்தப்படுகின்றன.
வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து ஓய்வூதியர்களும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து அந்தந்த ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதிக்குள் தமது வருடாந்த உயிர் வாழ்ச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். வெளிநாட்டு ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத் திணைக்களத்தின் முன்னரங்க செயற்பாட்டு மேசைகளுக்குச் சென்றோ அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவோ தமது உயிர் வாழ்ச் சான்றிதழை தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சேவைத் தேவையின் பேரில் கப்பலில் செல்லும் பிரதேச செயலகங்களால் கொடுப்பனவு செய்யப்படுகின்ற ஓய்வூதியர்கள், இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட தங்களின் உயிர்வாழ்ச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆறு (06) மாதங்களுக்கு விஞ்சாது ஒரு தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்லும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் வெளிநாட்டு ஓய்வூதியமாக கருதப்பட மாட்டாது மேலும் அவர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் வழக்கமான வழிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
Contacts
foreignpension@pensions.gov.lk
Postal Address
Foreign Pensions Division,
Department of Pensions,
Maligawatta,
Colombo 10,
Sri Lanka
Life/Residence Certificate – 2025
Bank of Ceylon – Metropolitan Branch Application இலங்கை வங்கி – மெட்ரோபொலிட்டன் கிளை விண்ணப்பம்
மக்கள் வங்கி – தலைமைச்செயலக கிளை விண்ணப்பம்
பான் ஏசியா வங்கி – பொரளை கிளை விண்ணப்பம்
ஹட்டன் நஷனல் வங்கி – பஞ்சிகாவத்தை கிளை விண்ணப்பம்
சேமிப்பு வங்கி – மாளிகாவத்தை கிளை விண்ணப்பம்